Thursday, April 29, 2010

உறக்கம் ( Urakkam)

கருமை சுமந்த இரவு,
குளிர் சுமந்த காற்று,
ஒப்பனையில்லா அம்புலியின் அழகு,
தெளிவில்லா தெருவிளக்கின் ஒளி,
கம்பளியின் அரவணைப்பு,
தாய்மடியாய் தலையணைகள்,
அத்தனையும் ரசித்தபடி
கண்ணில் வரும் உறக்கம்
மண்ணில் இருளருளிய சுவர்க்கம் !

1 comment:

  1. சில நேரங்களில் பணியிடத்திலும் பலபேர் உறக்கம் கொள்கிறார்கள்! :) அதனால் உறக்கும் கருமை சுமந்த இரவில் மட்டுமே வருமா?!

    ReplyDelete