Wednesday, June 16, 2010

அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu )

                           சரித்திரத்தின் மீது ஆர்வம் கொண்ட அனைவருடனும் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நம் விஞ்ஞானம் எவ்வளவுதான் தீரா பசியுடன் வரலாற்றுக் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டாலும் இன்றும் நமக்கு புலப்படாத பல அதிசயங்கள் எங்கும் நிலவுகின்றன. நான் வியந்து வியந்து ரசித்து படிக்கும் வரலாறு எகிப்தைப் பற்றியது. மேலும் ரோம், கிரேக்கம், பாபிலோன், ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகள் போன்றவற்றின் வரலாறு மீதும் மிகுந்த ஈடுபாடுண்டு. 


இந்த பக்கத்தில் சில அதிசய வரலாற்று சுவடுகளையும் நினைவுகளையும் உங்களோடு பகிர்கிறேன்.

....................................................................................................................................................................



மோய்(Moai)




மோய் என்பது மூதாதையர்களின் நினைவுச் சிலைகளை குறிக்கும் சொல்.ஈஸ்டர் தீவுகள் எனப்படும் கிழக்குத் தீவுகளில் இச்சிலைகள் காணப்படுகின்றன. இந்த தீவுகள் பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கு பகுதியில் உள்ளன. ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கான சிலைகள் இத்தீவில் காணப்படுகின்றன. சராசரியாக 8 முதல் 10 அடி வரையில் இதன் உயரமானது அமைந்துள்ளது. மேலும் சராசரியாக 25 டன் எடை கொண்டவையாகவும் இவை அமைந்துள்ளன.  "ஜேக்கப் ரசுவின்" என்பவரின்   சுற்றுப்பயணத்தில் இந்த தீவினைப் பற்றிய அதிசய செய்திகள் வெளிவந்தன. இங்கு உள்ள மோய் எனப்படும் சிலைகள் பல ஆயரம் கிலோ எடை கொண்டவை, இதனை யார், எதற்காக, எப்படி உருவாக்கினார்கள் என்பதே அங்கு நிறைந்துள்ள மர்மங்கள். "ராப்பா நூயி" என்ற பொலிசீனியப் பெயரால் இன்று வழங்கப்படும் ஈஸ்டர் தீவு இன்றைய தினத்தில் சுற்றுலாத் தளமாக மட்டும் உள்ளது.


இங்கு காணப்படும் மலைகளில் எண்ணற்ற  மோய் சிலைகள் தீவினை நோக்கிப் புதைக்கப்பட்ட நிலையில் உள்ளன, இச்சிலைகள் தீவினை கண்காணிக்கும் நோக்கில் ஈஸ்டர் தீவு மக்களால் நிறுவப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.





இத்தீவின் அழிவினைப் பற்றி இப்போது காண்போம்.

இத்தீவுகளில் மீன்பிடித் தொழிலும் விவசாயமும் நன்கு நிகழ்ந்து வந்துள்ளன. இறந்த மூதாதையர்களின் நினைவாக வைக்கப்பட இச்சிலைகளை பல கிலோ மீட்டர்கள் நகர்த்துவதற்காக பல நூறு மரங்களை வெட்டி அழித்துள்ளனர், You tube வீடியோ கோப்புகளில் அச்சிலைகள் எவ்வாறு நகர்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் தெளிவாக வரையறுக்கப்படுள்ளன. இவ்வாறு பல்லாயிரம் மரங்கள் வெட்டப்பட்டமையால் வறட்சி நிலவி பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலை காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் நிலவியுள்ளது. இந்த அவலம் அங்குள்ள பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. அதன் பின் இங்கு பரவிய அம்மை நோய் மீதி இருந்தோரையும் பலிகொண்டது. 250 டன் எடை கொண்ட ஒரு அசுர மோய் சிலை அந்த தீவிலேயே அதிக எடை கொண்ட சிலையாக கருதப்படுகிறது  இதன் உயரம் சுமார் 75 அடி.

















பல்வேறு நம்பிக்கையின் சான்றாக ஓங்கி நிற்கும்

இந்த சிலைகள், ஒரு தீவின் மொத்த மக்களும்

அழிவதற்கு வித்தாக அமைந்த இச்சிலைகள்,

பலநூறு ஆண்டுகளை கடந்து நிற்கும் இந்த சிலைகள்

பொலிசீனியத்தின் இறந்த மூதாதையரின் நினைவாக

நிறுவப்பட்டதா? இல்லை ராப்பா நூயி மக்களின்

அழிவிற்கு முன்னோடியாக நிறுவப்பட்டதா?


இயற்கை என்னும் மர்மக் காட்டில் இரையின் தேடல்....

                                                                                                                   (தேடல் தொடரும்)    

2 comments:

  1. உண்மைதான் இயற்க்கையினை முழுவதுமாக புரிந்துகொள்ள எந்த விஞ்ஞானத்தாலும் முடியவில்லை.. இயற்க்கையில் ஒரு உயிர் அதன் கட்டமைப்பு, திட்டமிடல், வெளியேற்றம், எச்சரிக்கை, செயல்பாடு போன்ற பல்வேறான செயல்பாடுகளை இயற்க்கை ஒரு உயிரில் உருவாக்கியுள்ளது அதற்க்கேற்ற வெளிச்சூழலையும் அது நமக்கு கொடுத்துள்ள்து ஆனால் மக்கள்தான் அதை சரியாக புர்ந்துகொள்ளாமல் அதனோடு சண்டைபோட்டு இறுதில் தோல்வியுறுகிறாகள்! ஆம் இயற்க்கை என்றும் ஆச்ச்ரியமானதுதான் அதிசயமானதுதான்.. அவ்வகையில் இயற்க்கையோடு ஒத்து உருவான‌ வரலாறு என்றும் அதிசயக்கும்!!

    ReplyDelete
  2. இயற்கையின் படைப்புகள் எல்லாமே அற்புதம்தான் என்றாலும் அதன் ஆவேசம், ஆக்ரோசம் எந்த விஞ்ஞானத்திற்கும் புரியாத புதிர்தான்....

    நல்ல பகிர்வு.

    உங்களின் தேடல்கள் தொடரட்டும்.

    ReplyDelete