Thursday, July 1, 2010

பெண்ணுரிமை ( Pennurimai )

வெறும் ஏட்டிலும் பாட்டிலுமா பெண்ணுரிமை ?
நம்நாட்டிலும் பண்பாட்டிலும் நடைமுறையில் எங்குண்டு அவர்க்குரிமை ?

வன்கொடுமை தான்செய்யினும் வாய்திறவா பதுமையென வணங்கி நிற்கும் கற்சிலையோ?
பேருந்தின் இருக்கையிலும் பேறு விடுதியிலும் சலுகை பெற்றதுதான் அவள் நிலையோ?

உயர்ச் சாதிவெறியன் கூறுகிறான் - தாழ்ந்த சாதியில் ஆண் நாய் வளர்க்க அனுமதி இல்லையென்று !!!
எங்கள் பெண்டிர் உமக்கு நாயைவிட அற்பமோ? இழிவு ஏற்கும் சொற்பமோ?

பெண்களின் சுயவளர்ச்சி சமுகத்தின் நீசமோ?
அன்னையை நிதமும் நிந்தித்தல்தான் நீ விரும்பும் தேசமோ?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நற்குணங்கள் அவளை பூசிக்கவோ? இல்லை ஈசிக்கவோ?

விரல் நெட்டி முறிக்கவும், மணமெட்டி சுமக்கவும்தான் பெண் அவனியில் பிறந்தாளோ?
முட்டுக் கட்டை கட்டியவர்தம் முதுகுப்பட்டை பொடிபட எட்டி உதைக்க மறந்தாளோ?

பெண்டறிவு ஓங்குதல் கண்டு சீற்றமோ?
ஆணென்னும் ஆதிக்க உணர்வின் ஏற்றமோ?
அடிமை நாயாய் பணிந்து கிடத்தல்தான் பெண்ணினத் தோற்றமோ?

என்னில் பாதி அவளென்னும் உண்மை மனம் ஏற்குமோ?
பேசும் அஃறிணைதான் பெண்ணென்று ஓதி பேதம் பார்க்குமோ?

ஆணிற்கழகு பெண்மையை போற்றுதல் அல்லாலன்றி தூற்றுதல் என்றும் ஏற்பதற்கிழிவே.

5 comments:

  1. கலங்கடிக்கும் வரிகள்.... அருமை. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. ponnunkanale pirachanai dha, ivalunka pirachanaikaka dha porakuralukale.

    ReplyDelete
  3. eppudi irundha ava ippudi akita. (super figure)

    ReplyDelete
  4. Amazing. I agree with you. Continue....!

    ReplyDelete
  5. தெரிந்து கொள்ளுங்கள். இதோ வியப்பான உண்மை தகவல்கள்.

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.



    1. **** பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே? அதற்கான காரணத்தை பார்ப்போம். *****


    2. **** பெண்களுக்கு மோட்சம் கிடையாது. உடலுறவுக்கு தேவடியாள்கள் விரும்பிய ஸ்த்ரிகள் நிறைய பேரை மோட்சலோகத்தில் அங்கு போனவன் படைத்துக் கொள்வான். *****

    **** உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா? *****


    **** ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!!. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு. *****

    ReplyDelete