கருமை சுமந்த இரவு,
குளிர் சுமந்த காற்று,
ஒப்பனையில்லா அம்புலியின் அழகு,
தெளிவில்லா தெருவிளக்கின் ஒளி,
கம்பளியின் அரவணைப்பு,
தாய்மடியாய் தலையணைகள்,
அத்தனையும் ரசித்தபடி
கண்ணில் வரும் உறக்கம்
மண்ணில் இருளருளிய சுவர்க்கம் !
Thursday, April 29, 2010
தமிழெந்தன் தாய் ( Tamil Enthan Thaai)
தமிழுக்கு இதமென்று பேர் !
இன்பத் தமிழெந்தன் இதயத்தில் இரக்கத்தின் தூண் !
தமிழுக்கு சேய் என்று பேர் !
அன்னைத் தமிழ் இந்த குழந்தைக்கு அமுதூட்டும் தாய் !
தமிழுக்குக் கனியென்று பேர் !
அன்புத் தமிழ் எங்கள் கவிதைக்குப் பசிதீர்க்கும் ஊண் !
தமிழுக்கு இசையென்று பேர் !
சங்கத் தமிழெந்தன் குரலுக்கு ஒலிமீட்டும் நாண் !
தமிழுக்குச் சுடர் என்று பேர் !
வளர்த் தமிழெங்கள் அறியாமைக் குளிருக்குத் தீ !
தமிழுக்குப் புனல் என்று பேர் !
செந்தமிழெங்கள் வறட்சிக்கு கார் தந்த நீர் !
தமிழுக்குக் கொடையென்று பேர் !
தொன் தமிழெங்கள் கருத்துக்குப் பதம் தந்த கோன் !
தமிழுக்குச் சுடர் என்று பேர் !
வளர்த் தமிழெங்கள் அறியாமைக் குளிருக்குத் தீ !
தமிழுக்குப் புனல் என்று பேர் !
செந்தமிழெங்கள் வறட்சிக்கு கார் தந்த நீர் !
தமிழுக்குக் கொடையென்று பேர் !
தொன் தமிழெங்கள் கருத்துக்குப் பதம் தந்த கோன் !
தமிழுக்கு மதியென்று பேர் !
கன்னித் தமிழெங்கள் இருளுக்கு ஒளிதந்த கோள் !
Monday, April 26, 2010
விடியல் ( Vidiyal )

ஆங்கே பரவிய பனித்துளி!
மிடிமையிடத்து மீண்ட வெள்ளொளி!
அடிமையறியா பறவையின் பாட்டொலி!
பரிதியின் படுக்கையாய்
பரந்த பேராழி!
விடியலின் வினோதங்கள்
விரியுலகில் எத்தனை ஆயிரங்கள்!
Saturday, April 24, 2010
இரக்கம் ( Irakkam )
இறந்தவர் தேகம் இடுகாடு செல்லும்முன்
இரக்கமின்றி மறக்கும் மனம் - இதில்
அன்பென்றும், காதலென்றும் வெளிப்பூச்சுகள்
துருக்களை மறைக்கும் தூரிகைகளோ!
துன்பங்கள் துளிர்க்க ஈரமில்லா இதயங்களில்
இன்பங்கள் மட்டும் இறக்கும்வரை இருந்திடுமோ!
Friday, April 23, 2010
மழை ( Mazhai )
"இருட்டிய வானம்
திரட்டிய துளிகளை
உருட்டி தெளிக்கிறது
அட்சதையாக!"
மதி ( Mathi )
"அரைத் திங்கள் வளரினும்
அரைத் திங்கள் குறையினும்
வீசும் ஒளியில் மாசில்லா கவிஞர்களின் ரதி - இவள்
புவிக்கு ஞாயிறுவின் இரவு பிரதி!"
Thursday, April 22, 2010
தனிமை ( Thanimai )
இன்பத்திலெல்லாம் என்னுடன் ஊடல் கொண்டு பிரிந்துவிடும் தனிமை
துன்பத்தில் மட்டும் என்மீது காதல் கொண்டு இணைகிறது!
இறக்கும் வரை எனக்குத் துணையாய் என் துணைவியாய்
எப்போதும்
என்னுடன்
என் தனிமை!
துன்பத்தில் மட்டும் என்மீது காதல் கொண்டு இணைகிறது!
இறக்கும் வரை எனக்குத் துணையாய் என் துணைவியாய்
எப்போதும்
என்னுடன்
என் தனிமை!
Subscribe to:
Posts (Atom)