Monday, August 16, 2010

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )


செத்ததடி என் நெஞ்சம்
பித்தனாய் உன் பின்னே அழைந்ததும்,
மெத்த நறுமண சோலைக்குள்
முத்தக்காடாய் உன் கன்னம் ஆக்கியதும்,
எத்தனை முறை நினைந்திருப்பேன்!
அத்தனையும் பொய்யோடி ?
தத்தையுனக்குத் திருமணமாம் - உன்
அத்தையவள் உரைக்கக் கேட்டேன். 
மத்தை தயிரில் கடைந்தது போல் 
சித்தம் முழுதும் கலைந்ததடி - உடல் 
இரத்தம் கணத்தில் உறைந்ததடி
இத்தனை பொழுதும் இசைந்த காதல்
நித்தமும் நிறைவாய் மிளிர்ந்த காதல் 
தத்தனை மறந்து உயிர்த்திடுமோ ?
ஒத்த நினைவுகள் மறத்திடுமோ ?
கொத்து மலர்களை அடைந்த வண்டாய் - உல
கத்தை மறந்து லயித்த மனம் - மடிய 
நைத்ததடி உன் மணநாள் செய்தி...
வைத்த விழி கலையாமல் உன்னழகை 
ருசித்த தளிரிதயம் - இன்று குற்றூசி 
தைத்த கொடுவலி யுணர்ந்ததடி 
வித்தகியென்றே உனை வியந்துரைப்பேன் செல்லமாய்-இன்று 
வித்தாகி விட்டாயோ நம்மின்னுறவை மற்றோனுக்கு ?
குத்தமுனையுரைக்க ஒப்பவில்லை மனம் - எனினும் 
சுத்தக் குருதியில் தீச்சாறு கலந்தாற்போல் - இம்மையின் 
மொத்த வினை வலியும் ஒருசேர்ந்தெனை கொல்லுதல் உணர்வாயோ ?

4 comments:

  1. உணர்ச்சி பொங்க வரிகள் எங்கும் காதல் உணர்வையும் பிரிவையும்
    தொடுத்துள்ளீர் அருமையான வரிகள் நண்பரே
    இது தங்கள் உண்மை கதையோ
    http://marumlogam.blogspot.com

    ReplyDelete
  2. அருமை... கடைசி 5 அல்லது 6 வரிகள் மிக மிக அருமை இதயத்தை தொட்டு விட்டது ..

    ReplyDelete
  3. தத்தனை மறந்து உயிர்த்திடுமோ ?
    ஒத்த நினைவுகள் மறத்திடுமோ ?

    எந்த வரிகளை பார்த்த பெண் கண்டிப்பாக மாம் ஏற்க மாட்டாள்....
    (இன்னும் நிறைய கேளுங்க..)

    ReplyDelete
  4. A beautiful thought of your mother
    Yes my brother, your affection to your mom is seen from your words.
    Nalina

    ReplyDelete